திருவாரூர் தொகுதிக்கு வரும் ஜனவரி 28 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமமுக சார்பில் எஸ்.காமராஜ், திமுக சார்பில் பூண்டி கலைவாணன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். அதிமுக இன்னும் ஓரிரு நாட்களில் தனது வேட்பாளாளரை அறிவிக்கவுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக, திமுக மக்களை சந்திக்க பயப்படுகிறார்கள். அமமுகவை பார்த்து எல்லா கட்சிகளும் பயம் எனவும் திருவாரூரில் அமமுக தான் வெற்றி பெறும் என கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி தரும் விதமாக பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தை யாராலும் தொட முடியாது. தினகரனின் அமமுக கட்சியோ சிறு குழந்தை. ஆனால் அதிமுகவோ இளைஞர் என பேசினார். அமைச்சரின் இந்த பஞ்ச் டைலாக்கை கண்டபடி இணையத்தில் கிண்டலடித்து வருகின்றனர். எது எப்படியாயினும் தேர்தல் நடக்குமா நடக்காதா என்ற குழப்பமே இன்னும் நீடித்து வருகிறது