பிளிப்கார்ட் விற்பனை தளத்தில் ஐபோன்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆன்லைனில் பொருட்களை வாங்குவது தற்காலத்தில் சாதாரணமான செயலாகி வருகிறது. கடைவீதிக்குச் சென்று ஆராய்ந்து துணி, பொருட்களை வாங்குவதற்குப் பதில் வீட்டில் இருந்தபடியே ஸ்மார்ட்போன் மூலம் ஆன்லைனில் வாங்குவது எளிமையாகிவிட்டது. உள்ளங்கைக்குள் அடங்கும் ஒரு ஸ்மார்ட் போனில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற செயலிகள் மூலம் பொருட்களை இந்தியாவின் எந்த மூலையிலிருந்தும் பெற முடிகிறது.
இந்நிலையில் பிளிப்கார்ட் விற்பனை தளத்தில் தற்போது ஐபோன்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஐபோன் 14, 128 ஜிபி மொபைல் 56 ஆயிரத்து 999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் முந்தைய விலை ரூ.69,900.
UPI வழியாக போன் வாங்கினால் கூடுதலாக 750 ரூபாய் தள்ளுபடியும், பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கடன் அட்டையை பயன்படுத்தி வாங்கினால் ரூ.2,850 கேஸ் பேக்கும் அளிக்கப்படுகிறது.
அதேபோல் ஐபோன் 15, 128 ஜிபி மொபைல் 66 ஆயிரத்து 999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் முந்தைய விலை ரூ.79,900. ஆக்சிஸ் வங்கி கடன் அட்டையை பயன்படுத்தி வாங்கினால் ரூ.3,350 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஐபோன் 13 மாடல் 52 ஆயிரத்து 999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கூடுதலாக எச்டிஎப்சி கடன் அட்டைக்கு ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது.