இந்தியா முழுவதும் 5ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனை அதிகரித்துள்ள நிலையில் பிரபலமான ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பலவும் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனையில் போட்டி போட்டு வருகின்றன. இந்நிலையில் லாவா நிறுவனமும் தனது புதிய Lava Blaze 5G ஸ்மார்ட்போனை கடந்த ஆண்டில் அறிமுகம் செய்தது. பல்வேறு சிறப்பம்சங்கள் + 5ஜி தொழில்நுட்பத்துடன் குறைந்த விலையில் வெளியான இந்த ஸ்மார்ட்போன் பல வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.
முன்னதாக 4 ஜிபி, 6 ஜிபி ரேம் வேரியண்டுகளில் வெளியாகியிருந்த இந்த ஸ்மார்ட்போனுக்கு வரவேற்பு கிடைத்துள்ளதால் அடுத்து இதே மாடலில் 8 ஜிபி ரேம் வேரியண்டில் புதிய ஸ்மார்ட்போனையும் லாவா அறிமுகம் செய்துள்ளது.