அம்மா உணவகங்களில் முட்டை இலவசம் - இது நல்லா இருக்கே...!!

Webdunia
வியாழன், 9 ஏப்ரல் 2020 (10:10 IST)
இன்று முதல் சேலம் அம்மா உணவகங்களில் முட்டை இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கை பின்பற்றி மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதை தவிர்த்து வேறு எதற்காகவும் மக்கள் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
ஊரடங்களால் ஏழை மக்களும், தினக்கூலிகளும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இவர்களுக்காக தமிழகத்தில் அம்மா உணவகம் வழக்கம்போல இயங்கி வருகிறது. நடமாடும் அம்மா உணவகங்களை செயல்பாட்டில் கொண்டு வரவும் கோரிக்கை எழுந்துள்ளது. 
இந்நிலையில், சேலம் அம்மா உணவகங்களில் முட்டை இலவசம் என சேலம் மாநகராட்சி அறிவித்துள்ளது. ஆம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 11 அம்மா உணவகங்களில் இன்று முதல் மதிய உணவுடன் முட்டை இலவசமாக வழங்கப்படுகிறது. 
 
இது வரவேற்க தக்க ஒன்றாக உள்ளது. இதேபோல தமிழகம் முழுவதும் இயங்கும் அம்மா உணவகங்களிலும் முட்டைகள் வழங்கப்பட்டால் சிறப்பாக இருக்கும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்