நடிகர் விஜய்யை தட்டி வைக்கத்தான் ஐடி சோதனை - சீமான்

Webdunia
வியாழன், 13 பிப்ரவரி 2020 (19:38 IST)
நடிகர் விஜய்யை தட்டி வைக்கத்தான் ஐடி சோதனை - சீமான்

சமீபத்தில் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இது இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. அதேசமயம், தயாநிதிமாறன் எம்.பி பாராளுமன்றத்திலும் எதிரொலித்தார். இந்நிலையில் இன்று சீமான், விஜய் அரசியலுக்கு வராமல் இருக்கவே வருமான வரி சோதனை என தெரிவித்தார்.
 
சென்னை வளசரவாக்கத்தில் இயக்குநர் பாலுமகேந்திராவின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாலுமகேந்திரா நூலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதனை இயக்குநர் பாரதிராஜா திறந்துவைத்தார். இதில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைபாளர் சீமான், சீனுராமசாமி,வெற்றி மாறன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
 
அப்போது, சீமான் கூறியதாவது :
 
நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதன் நோக்கமே அவரை அரசியலுக்கு வரவிடாமல் தட்டி வைப்பதற்கான முயற்சி தான் என தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்