விஜய் அரசியல் கட்சி தொடங்க எனது வாழ்த்துக்கள்: சீமான்

Webdunia
வியாழன், 2 நவம்பர் 2023 (12:56 IST)
நடிகர் விஜய் அரசியல் கட்சியை விரைவில் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

விஜய் போன்ற புதியவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் அண்ணாமலையை அடுத்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் விஜய்க்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்த போது ’அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்பது நடிகர் விஜய்யின் கனவு என்றும் அவரது கனவு நனவாக எனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்தார். மேலும் நடிகர் விஜய் முதுகுக்கு பின்னால் செய்ய வேண்டியது தட்டிக் கொடுப்பது மட்டுமே என்றும் அவர் கூறினார்.

 நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் விஜய் அரசியல் கட்சி தொடங்குவாரா அல்லது ரஜினியை போல கடைசி நேரத்தில் பின் வாங்கி விடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்