ஆளுநரிடம் ரஜினி அரசியல் பேசியதில் தவறில்லை : சீமான்

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (15:16 IST)
ஆளுநரிடம் ரஜினிகாந்த் அரசியல் பேசியதில் எந்த தவறும் இல்லை என்றும் அரசியல் யாரிடம் வேண்டுமானாலும் பேசலாம் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்
 
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது ஆளுநரை சந்தித்து அரசியல் பேசுவதில் தவறில்லை என்றும் யார் வேண்டுமானாலும் ஆளுநரை சந்தித்து அரசியல் பேசலாம் என்றும் கூறினார் 
 
அரசியல் பேசாதவன் மனிதனாக இருக்க முடியாது என்று மகாத்மா காந்தி கூறி இருக்கிறார் என்றும் மனித உரிமைக்காக பேசும் அனைத்தும் அரசியல் தான் என்றும் அவர் கூறினார் 
 
அந்த உரிமை ரஜினிகாந்துக்கும் அரசியல் குறித்து பேச உரிமை இருக்கிறது என்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் ஆளுநரை நியமித்து உள்ளார்கள் என்றும் பிறகு ஏன் ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்றும் தெரிவித்தார்
 
ஆனால் அதே நேரத்தில் ஆளுநரிடம் அரசியல் பேச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.
 
ஆளுநரை சந்தித்து ரஜினிகாந்த் அரசியல் பேசியது குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் சீமான் இதற்கு ஆதரவு தெரிவித்தூள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்