தேசிய கொடியை DP-ல் வைத்த ரஜினிகாந்த்! – உடனே ரசிகர்கள் செய்த காரியம்!

வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (09:10 IST)
இந்தியாவின் 75வது சுதந்திர தினம் நெருங்கியுள்ள நிலையில் தேசிய கொடியை DPஆக மாற்றியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

இந்தியாவின் 75வது சுதந்திர தினம் ஆகஸ்டு 15ம் தேதி இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு விழா, நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளையும் ஏற்பாடு செய்து வருகின்றன.

முன்னதாக பிரதமர் மோடி நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக அனைத்து மக்களும் தங்கள் சமூக வலைதள கணக்குகளில் தேசிய கொடியை Common DP ஆக வைக்க கோரிக்கை விடுத்தார். தானும் தனது டிபியில் தேசிய கொடியை வைத்தார்.

தற்போது நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் கணக்கு டிபியில் தேசியக் கொடியை வைத்துள்ளார். இதை பார்த்த ரஜினி ரசிகர்கள் பலரும் தாங்களும் தங்கள் டிபியில் தேசியக் கொடியை வைத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்