இளையராஜா பெரும்பான்மை, மகன் யுவன் ஷங்கர் ராஜா சிறுபான்மையா? சீமான் கேள்வி..!

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (15:26 IST)
இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களை சிறுபான்மையர் என்று சொன்னால் செருப்பால் அடிப்பேன் என்று சர்ச்சைக்குரிய வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார் என்பதை சற்றுமுன் பார்த்தோம். 
 
இந்த நிலையில் இசைஞானி இளையராஜா பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர் அவருடைய மகன் யுவன் சங்கர் ராஜா சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவரா என்று கேள்வி எழுப்பி உள்ளார். 
 
மதத்தின் அடிப்படையில் மக்களை சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என்று பிரிக்க கூடாது என்று இனம், மொழி தேசிய இனத்தின் அடிப்படையில் தான் சிறுபான்மை பெரும்பான்மை என வரலாறு முழுவதும் கூறப்பட்டிருக்கிறது என்றும் சீமான் தெரிவித்தார். 
 
இளையராஜா பெரும்பான்மை என்றும் அவரின் மகன் யுவன் சங்கர் ராஜா இஸ்லாமியத்துக்கு மாறியதால் அவரை சிறுபான்மை என்றும் கூறுவது சரியா? இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினர் அல்ல அவர்கள் தமிழ் பிள்ளைகள் என்று சீமான் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்