அமைச்சர் அன்பில் மகேஷ் என்னுடன் நேரில் விவாதம் செய்ய தயாரா..? சீமான் கேள்வி

Siva
ஞாயிறு, 20 அக்டோபர் 2024 (16:50 IST)
தமிழ்நாடு திராவிட நாடா அல்லது தமிழ்நாடா என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் என்னுடன் விவாதம் செய்யத் தயாராயிணா, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுப்பிய கேள்வி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
'தமிழ்நாடு திராவிட நாடு' என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறிய நிலையில், 'தமிழ்நாடு திராவிட நாடா' அல்லது 'தமிழ்நாடா' என்ற விவாதத்தை என்னுடன் செய்ய அமைச்சர் அன்பில் மகேஷ் தயாரா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நாங்கள் ஆட்சி வந்தால், புதிய தமிழ்த்தாய் வாழ்த்து உருவாக்கப்படும்' எனவும் 'தமிழ்நாடு அமைச்சரவையில் எத்தனை தமிழர் உள்ளனர் என்பதை விரல் விட்டு எண்ண முடிகிறதா?' என அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பினார்.
 
"திருமாவளவன் முதலமைச்சராக வருவதை வரவேற்கிறேன்; அதற்கான தகுதி அவருக்கு உள்ளது. தமிழராக, தம்பியாக, என்னை விட அவர் முதலமைச்சர் ஆவதை எண்ணி பெருமைப்படுகிறேன்," என சீமான் தெரிவித்துள்ளார். 
 
மேலும், "விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தை கண்டு திமுக பயப்படும். நேர்மையாளராக நல்ல ஆட்சி கொடுத்திருந்தால் எதைக் கண்டு பயப்பட வேண்டியது?" என்றும் அவர் கூறினார்.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்