மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுவதால், அதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை வரும் 25ஆம் தேதி வரை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இடையே மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அளித்துள்ளது.
எனவே, மேற்கண்ட பத்து மாவட்டங்களில் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஏற்கனவே இன்று அதிகாலை சென்னையில் உள்ள பல பகுதிகளில் நல்ல மழை பெய்தது என்பதும், இதனால் தட்பவெப்ப நிலை குளிர்ச்சியாக மாறி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.