வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக உருமாறும் என்றும் இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
சேலம், நாமக்கல், திருப்பூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், விழுப்புரம், கடலூர், வேலூர் மாவட்டங்களில் இன்றும் நாளையும் நல்ல மழை பெய்யக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அக்டோபர் 24, 25 தேதிகளில் வரவுள்ள புயல் ஒரிசா கடற்கரையை நோக்கி செல்லும் என்றும், அதனால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.