எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆண் மற்றும் பெண் வேட்பாளர்கள் சரிசமமாக களமிறக்கப்படுவார்கள் என சீமான் அறிவித்துள்ளார்.
தமிழக ஊராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. ஆளுங்கட்சியான அதிமுக கணிசமான வித்தியாசத்தில் திமுகவை விட குறைவான இடங்களை பெற்றுள்ளது. ஒன்றிய தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றிப்பெற்றுள்ளது.
இந்த தோல்விக்காக துவண்டுவிடாமல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து பேசியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். அவர் கூறியதாவது, லோக்சபா தேர்தலில் பெற்ற 4% என்ற வாக்கு விகிதம், தற்போது நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 10% வாக்குகளாக அதிகரித்துள்ளது.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆண் மற்றும் பெண் வேட்பாளர்கள் சரிசமமாக களமிறக்கப்படுவார்கள். 234 தொகுதிகளில் தலா 117 ஆண் மற்றும் பெண் வேட்பாளர்களுக்கு நம் தமிழர் போட்டியிட வாய்ப்பு வழங்கும். போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர்கள் இந்த மாதம் அறிவிக்கப்படுவர் என்று அறிவித்துள்ளார்.