தமிழகத்தின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 91975 பணிகளை நிரப்புவதற்காக கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி, முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 76.19 % வாக்குகள் பதிவானது. அதையடுத்து டிசம்பர் 30 ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் உள்ளாட்சி தேர்தலில் 77.73 வாக்குகள் பதிவானது.
தற்போதைய நிலவரப்படி மாவட்டம் கவுன்சிலருக்கான மொத்தமுள்ள 515 இடங்களில் அதிமுக 176 இடங்களிலும், திமுக 172 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் ஒன்றிய கவுன்சிலர் மொத்தமுள்ள 5067 இடங்களில் அதிமுக 860 இடங்களும், திமுக1029இடங்களும் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், காலை முதல் மாலை வரை நாம் தமிழர் கட்சியினர் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத நிலையில், தற்போது, குமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் ஒன்றிய 11 வது வார்டில் சுனில் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி அக்கட்சியினருக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.