வேலூரில் அடுத்த மாதம் நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலின் போது திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவர் மகன் கதிர் ஆனந்த் வீடுகளில் வருமானவரி துறை ரெய்டு நடத்தியது. இதில் கதிர் ஆனந்த் உறவினர்கள் வீட்டில் 10 கோடி ரூபாய் வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த பணம் என கூறப்பட்டதால் வேலூர் தொகுதி மக்களவை தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.
நேற்று வேலூர் சட்டமன்றத்திற்கான தேர்தல் ஆக்ஸ்டு 5 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்ததையடுத்து மீண்டும் திமுக சார்பில் கதிர் ஆனந்தும் அதிமுக சார்பில் ஏ சி சண்முகமும் மீண்டும் போட்டியிட உள்ளனர். இதையடுத்து நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக தீபலட்சுமி என்பவரை சீமான் அறிவித்துள்ளார். அவருக்குக் கட்சியின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென சீமான் அறிவுறுத்தியுள்ளார்.