நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வேலூருக்கும் தேர்தல் நடந்திருக்க வேண்டும். அப்போது திமுக வேட்பாளராக களம் இறங்கியவர் கதிர் ஆனந்த. அந்த சமயம் திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவர் மகன் கதிர் ஆனந்த் வீடுகளில் வருமானவரி துறை ரெய்டு நடத்தியது. இதில் கதிர் ஆனந்த் உறவினர்கள் வீட்டில் 10 கோடி ரூபாய் வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த பணம் என கூறப்பட்டதால் வேலூர் தொகுதி மக்களவை தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.