காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் கழுத்து அறுத்த தாய் மாமன்: அதிர்ச்சி சம்பவம்

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (18:27 IST)
காதலிக்க மறுத்த ஒன்பதாம் வகுப்பு மாணவியை தாய்மாமன் கழுத்தை அறுத்து ஆசிட் வீசிய சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியை அவரது தாய்மாமன் நாகராஜ் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது
 
இந்த காதலை அந்த மாணவி ஏற்றுக் கொள்ளாததால் ஆத்திரமடைந்த நாகராஜ் மாணவியின் கழுத்தை கத்தியால் அறுத்து முகத்தில் ஆசிட்டை வீசிவிட்டு தப்பித்துள்ளார்
 
மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அவரை மருத்துவமனையில் அவரது பெற்றோர் அனுமதித்தனர். இந்த நிலையில் தலைமறைவாக உள்ள நாகராஜை போலீசார் தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்