கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (12:30 IST)
கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
கள்ளக்குறிச்சியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து அந்த பள்ளியின் தாளாளர் உள்பட 4 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்
 
இதனையடுத்து அவர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் அனைவருக்கும் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 
 
பள்ளி மாணவியின் முதல் பிரேத பரிசோதனை அறிக்கைக்கும், இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு முரண்பாடு இல்லை என்றும் விரிவான உத்தரவு பிறப்பித்த பின்னர் நீதிபதி இளஞ்செழியன் இந்த ஜாமீன் மனு மீதான உத்தரவை பிறப்பித்துள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்