நைட்டியில் ஹாயாக வலம் வரும் சசிகலா: வெளியானது வீடியோ!

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2017 (11:57 IST)
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள், சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளதாக வெளியான புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
Image Source: Prajaa TV

சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா சிறையில் ஆய்வு மேற்கொண்டு அம்மாநில டிஜிபி தத்தாவுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பினார். இந்த விவகாரம் பெரும் புயலை கிளப்பியுள்ளது. அதில் சசிகலா சிறை அதிகாரிகள், சிறைத்துறை டிஜிபி ஆகியோருக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து பல்வேறு சலுகைகளும், வசதிகளும் பெற்றதாக கூரப்பட்டுள்ளது.
 
இது பெரும் பரபரப்பை உருவாக்க இது தொட்ரபாக விசாரணை நடத்த கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டார். இதனையடுத்து இந்த சம்பவத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த டிஐஜி ரூபாவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

 

நன்றி: Prajaa TV
 
இந்நிலையில் சசிகலா சிறையில் ஜாலியாக நைட்டியுடன் வலம் வரும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் சசிகலாவின் குரல் தெளிவாக கேட்கிறது. மேலும் சிறையில் சசிகலாவுக்கு உள்ள வசதிகளும் அந்த வீடியோவில் சுட்டிக்காட்டப்படுகிறது. சிறையில் கைதிகளுக்கான உடையை அணியாமல் சசிகலா நைட்டியுடன் வலம் வருவது அவர் மீது டிஐஜி ரூபா வைத்துள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிப்பது போல் உள்ளது.
அடுத்த கட்டுரையில்