சசிக்கலா விடுதலை; ஜெயலலிதா நினைவிடம் திறப்பு! – ஒரேநாளில் நடப்பது தற்செயலா?

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2021 (18:07 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலாம் விடுதலையாகும் அதே நாளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்படுவது அரசியல் வட்டாரத்தில் புகைச்சலை கிளப்பியுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுசெயலாளருமாக இருந்த ஜெயலலிதா இறந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அவருக்காக மெரினாவில் கட்டப்பட்டு வந்த நினைவிடம் ஜனவரி 27 அன்று திறக்கப்பட உள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் முன்னிலையில் நடைபெறும் இந்த நிகழ்வில் அதிமுகவினர் பலரும் பொதுமக்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் அதே நாளில் மறைந்த முன்னாள் முதல்வருடன் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவின் தோழியான சசிக்கலா சிறையிலிருந்து விடுதலையாகிறார். அவர் சிறை செல்லும் முன்பாக ஜெயலலிதா சமாதியில் தரையில் அடித்து சத்தியம் செய்த நிலையில், அவர் விடுதலையின்போதே நினைவிடமும் திறக்கப்படுவது தற்செயலானதுதானா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் விடுதலையாகி வெளியே வரும் சசிக்கலா தனது மறைந்த தோழியின் நினைவிடத்திற்கு வருகை தருவாரா என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்