ஜனவரி 27 திறக்கப்படுகிறது அம்மா நினைவிடம்! - திறந்து வைக்கும் எடப்பாடியார்!

செவ்வாய், 19 ஜனவரி 2021 (17:33 IST)
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டும் பணிகள் முடிந்த நிலையில் ஜனவரி 27 திறக்கும் விழா நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுசெயலாளருமான ஜெயலலிதா மறைந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அவருக்கு மெரினா கடற்கறையில் உள்ள அவரது சமாதியை நினைவிடமாக அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில் எதிர்வரும் ஜனவரி 27ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார். இந்த நிகழ்வை துணை முதல்வர் ஓபிஎஸ் முன்னிலை வகித்து வழிநடத்துவார் என்றும், மற்ற அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிமுக முக்கிய உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்