அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை: ஈபிஎஸ் தடாலடி!!

செவ்வாய், 19 ஜனவரி 2021 (13:03 IST)
சசிகலா சிறையில் இருந்து வருவதால் அதிமுகவில் எவ்வித தாக்கமும் ஏற்படாது என எடப்பாடி பழனிச்சாமி தகவல். 

 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று இரண்டு நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நலப்பணி திட்டங்களுக்காக மத்திய அரசிடம் நிலுவை தொகையை வழங்க அவர் வலியுறுத்த உள்ளதாக ஒருபுறம் பேசிக்கொள்ளப்படும் நிலையில், பாஜகவுடன் கூட்டணியில் உள்ளதால் கூட்டணி குறித்தும் பேச வாய்ப்புள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.
 
இந்நிலையில் முதல்வரின் இந்த பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ”சசிகலா விரைவில் விடுதலையாக உள்ள நிலையில், அவரிடம் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ளவே முதல்வர் பிரதமரையும், அமித்ஷாவையும் சந்திக்க சென்றுள்ளார்” என கூறியுள்ளார்.
 
இதனிடயே இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா சிறையில் இருந்து வருவதால் அதிமுகவில் எவ்வித தாக்கமும் ஏற்படாது. ஜெயலலிதா இருந்த வரை சசிகலா அதிமுக கட்சியில் கூட இல்லை. சசிகலா தொடர்பாக அதிமுக பொதுக்குழுவில் ஏற்கனவே தெளிவாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. சசிகலா மீண்டும் அதிமுகவில் இணைய வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்