சசிகலா பரோல் மனு: அதிரடி முடிவெடுத்த பெங்களூரு சிறை நிர்வாகம்

Webdunia
திங்கள், 19 மார்ச் 2018 (12:37 IST)
சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு சமீபத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டதால் சென்னை தனியார்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை பார்க்க அனுமதிக்குமாறு சசிகலா பரோல் மனுவிற்கு விண்ணப்பித்திருந்தார்.

ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் சசிகலாவுக்கு பரோல் வழங்கப்பட்டிருப்பதால் மீண்டும் பரோல் தர முடியாது என பெங்களூரு சிறை நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் நெருங்கிய உறவினர் உயிரிழப்பு நடந்தால் மட்டுமே பரோல் வழங்கப்படும் என சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சசிகலா தரப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடராஜனின் உடல் தேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்