தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சற்று முன் தனது சமூக வலைதளத்தில் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் என்று நீட் தேர்வு குறித்து திமுக அரசை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டார்.
இந்த அறிக்கை சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் திமுகவின் செய்தி தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை தனது சமூக வலைதளத்தில் இது குறித்து பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
சட்டசபையில் இன்றைய முதல்வரின் பேச்சு, தமிழ் நாட்டின் சட்டசபை வரலாற்றில் மிகச் சிறந்த பேச்சுகளில் ஒன்று!
இது மக்கள் மனதில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதனை உணர்ந்து, அந்த தாக்கத்தை மட்டுப்படுத்தும் முயற்சி தான் தவெக தலைவர் விஜய் அவர்களின் நீட் குறித்த இந்தப் பதிவு.
இந்திய அரசியலமைப்பு சட்டம் எப்படி இயங்குகிறது என்ற அடிப்படை புரிதல் இல்லாமல் அவசரத்தில் அள்ளி தெளித்த கோலம் போல கருத்துகளை அள்ளி வீசியிருக்கிறார்!
ஒட்டு மொத்த தமிழ் நாட்டின் எண்ணத் துடிப்பு “நீட் விலக்கு” அதனை வம்படியாக திணிக்கும் பாஜகவிற்கு எதிராக ஏதேனும் கருத்துகளை தெரிவுத்திருக்கிறாரா திருவாளர் விஜய். தமிழ் நாட்டின் நீட் விலக்கு சட்டம் என்னவானது என ஒன்றிய பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா?