நீட் தேர்வை எதிர்த்து விரைவில் போராட்டம் நடத்த இருப்பதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். இன்று ஈரோட்டில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் மீண்டும் சரத்குமார் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்
இந்த நிலையில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது நீர் தேர்வு எதிர்த்து விரைவில் போராட்டம் நடத்த போகிறோம் என்றும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்
மேலும் வட மாநிலத்தவர்களின் வருகையை காவல் நிலையத்தில் பதிவு செய்து கொள்வது நல்லது என்றும் அவர் யோசனை கூறியுள்ளார்.