முதுநிலை நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த டாக்டர் திடீர் மாயம்..!

வியாழன், 16 மார்ச் 2023 (10:28 IST)
முதுநிலை  நீட் தேர்வு ரிசல்ட் நேற்று வெளியான நிலையில் இந்த தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த டாக்டர் திடீரென மாயமாகியுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சேர்ந்த டாக்டர் ஒருவர் முதுநிலை நீட் தேர்வை எழுதிய நிலையில் அவர் குறைவான மதிப்பெண் எடுத்து உள்ளார். இதனால் விரக்தியடைந்த அவர் தனது சகோதரனுக்கு மொபைல் போன் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு பெற்றோரை பார்த்துக்கொள் என எஸ்எம்எஸ் அனுப்பிவிட்டு திடீரென மாயமாக உள்ளார். 
 
இந்த எஸ்எம்எஸ்ஐ பார்த்த டாக்டரின் சகோதரர் அதிர்ச்சி அடைந்த உடனடியாக காவல்துறையில் புகார் கொடுத்துள்ளதாகவும் இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாயமான டாக்டரை தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
முதுநிலை நீட் தேர்வு குறைவான மதிப்பெண் எடுத்த டாக்டர். மாயமாகி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்