சபரிமலை விவகாரத்தில் பெண்கள் சன்னிதானத்திற்குள் நுழைவது குறித்தான உச்சநீதிமன்ற தீப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும், என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோவிலுக்குள் செல்ல முற்பட்ட பெண்களை தடுத்து நிறுத்தியும் நேற்று மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இதனால் சபரிமலையில் நேற்று பரபரப்பான சூழல் காணப்பட்டது. இதனையடுத்து தேவசம் போர்டு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.
இதுகுறித்து பேசிய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தாம் மதிப்பதாகவும், ஆனால் காலம் காலமாக பின்பற்றி வரும் மரபுகளை மாற்ற முடியாது எனவும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.