பிப்ரவரி 29ல் ஓய்வு பெறவுள்ள சேலம் பல்கலை பதிவாளர் சஸ்பெண்ட்..!

Mahendran
செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (19:11 IST)
சேலம் பெரியார் பல்கலை. பதிவாளர் தங்கவேலு மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால் அவரை சஸ்பெண்ட் செய்ய துணை வேந்தருக்கு உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
 
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு கணிப்பொறி, இணைய உபகரணங்கள் வாங்குயதில் முறைகேடு நடந்ததாக பதிவாளர் தங்கவேலு  மீது   குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. 
 
அளவுக்கு அதிகமாக கணினிகள் வாங்கியதாகவும், அதில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகப் புகார் எழுந்த நிலையில் இதுகுறித்து விசாரித்த தமிழக அரசு, பதிவாளர் தங்கவேலுவைப் சஸ்பெண்ட் செய்ய பல்கலைக்கழகத் துணை வேந்தருக்கு உத்தரவிட்டது. 
 
பதிவாளர் தங்கவேலு பிப்ரவரி 29ஆம் தேதி ஓய்வு பெறுவதாக இருந்த நிலையில் தற்போது அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால் அவரை சஸ்பெண்ட் செய்ய துணை வேந்தருக்கு உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்