எம்.எல்.ஏக்களின் சம்பளம் இரு மடங்காக உயர்வு : எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

Webdunia
புதன், 19 ஜூலை 2017 (12:58 IST)
தமிழக எம்.எல்.ஏக்களின் சம்பளத்தை இரு மடங்காக உயர்த்தி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.


 

 
தங்களின் சம்பளத்தை உயர்த்தி தர வேண்டும் என தமிழக எம்.எல்.ஏக்கள் கடந்த சில வருடங்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், இன்று சட்டசபையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ரூ.55 ஆயிரமாக உள்ள எம்.எல்.ஏக்களின் சம்பளம் இரு மடங்காக உயர்த்தப்பட்டு ரூ.1 லட்சத்து 5 ஆயிரமாக வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், இந்த ஊதிய உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் கணக்கிட்டு அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
 
இந்த அறிவிப்பை தொடர்ந்து அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களும் மேஜையை தட்டி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
 
அதேபோல், ஓய்வு பெற்ற எம்.எல்.ஏக்களுகு அளிக்கப்படும் ஓய்வூதிய தொகை ரூ.12 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், எம்.எல்.ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியிலிருந்து ரூ.2 கோடியே 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்