கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

Webdunia
வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (17:37 IST)
கரூரில் 30 வது சாலைபாதுகாப்பு வாரவிழாவினை முன்னிட்டு கரூர் மாவட்ட காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.



கரூரில் 30 வது சாலைபாதுகாப்பு வாரவிழாவினை முன்னிட்டு கரூர் மாவட்ட காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.கரூர் அடுத்த வெண்ணமலை, அட்லஸ் கலையரங்கத்தில் நடைபெற்ற, 30 வது சாலை பாதுகாப்பு வாரவிழாவினையொட்டி 4 வது நாளாக தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில், கரூர் டி.எஸ்.பி கும்மராஜா தலைமை வகித்தார். கரூர் மாவட்ட வட்டார போக்குவரத்து துறை அலுவலர் சுப்பிரமணி., முன்னிலை வகித்தார். மேலும், இந்நிகழ்ச்சியில் காரில் செல்லும் போது சீட் பெல்ட் அணிவது குறித்தும், இருசக்கர வாகனங்களில் செல்லும் போது தலைக்கவசம் அணிவது குறித்தும் விழிப்புணர்வு நிகழ்த்தப்பட்டது. மேலும், இந்த கருத்தரங்கில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர்.
 
சி.ஆனந்தகுமார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்