வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்தது குறித்து கருத்து தெரிவித்த பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே என்பவர், "நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை ரத்து செய்வதன் மூலம், நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை நீதிமன்றம் எடுத்துக் கொள்கிறது," என்று குற்றம் சாட்டினார்.
"உச்ச நீதிமன்றம் சட்டம் இயற்றினால், நாடாளுமன்றத்தை மூட வேண்டிய நிலை ஏற்படும்," என்றும், உச்சநீதிமன்ற நீதிபதியையே நியமனம் செய்யும் குடியரசுத் தலைவருக்கு கூட உத்தரவுகளை உச்சநீதிமன்றம் வழங்குகிறது," என்றும், "இது உள்நாட்டு போர் ஏற்பட காரணமாக அமையும்," என்றும் அவர் தெரிவித்தார்.