கரூர் அருள்மிகு ஸ்ரீ கன்னிமார் சுவாமி ஆலய கும்பாபிஷேக நிகழ்ச்சி

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் குப்பம் கிராம பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கன்னிமார் சாமி ஆலய கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. 

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். புடவை மற்றும் மண்பானை வைத்து வழிபடும்  வழக்கம் கரூர் மாவட்டம் குப்பம் கிராமம் பகுதியில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 
 
இப்பகுதியில் பல நுாறு ஆண்டுகாலமாக உள்ள அருள்மிகு கன்னிமார்சாமி திருக்கோவில் உள்ளது. இந்த ஆலயத்துக்கு கரூர், அவரக்குறிச்சி, வேலாயுதம்பாளையம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து வந்து சாமிதரிசனம் செய்வார்கள்.
 
இந்த ஆலயத்தின் சிறப்பு மூலவர் கிடையாது, அதேபோல் கோபுரமும் கிடையாது. மூலவர் இருக்கும் இடத்தில் மண்மாணை மற்றும் புடவை  வைத்து வணங்கி வருகின்றனர். ஆந்தை குல தெய்வாமாகி கருதிருவரும் இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக
நடைபெற்றது. கடந்த 7 ம் தேதி ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் தீர்த்தம் எடுத்தும் அதை தொடர்ந்து கணபதிஹோமம், வாஸ்து சாந்தி  நடைபெற்றது.
 
இன்று அதிகாலை 4 மணிக்கு அருள்மிகு கன்னிமார் சாமி ஆலயத்துக்கு மஹாகும்பாபஷேகம் நடைபெற்றது. பிரம்மஸ்ரீ எம்.பாலசந்தர் அய்யர்  யாகவேள்விகள் மற்றும் கலஷாபபிஷேகம் நடைபெற்றது. இந்த ஆலய கும்பாபிஷேக விழாவுக்கு திறளான பக்தர்கள் கலந்து கொண்டு  சாமியை தரிசனம் செய்தனர். 
 
இந்த ஆலயத்தின் முக்கிய சிறப்பு என்னவென்றால் பெண்குழந்தைகள் முன்னிலையில் தீர்த்தம் வாரி நடைபெற்றது. பெண் கடவுளான  கன்னிமார் சாமியை வணங்கினால் சகல ஐஸ்வர்யங்கள் மற்றும் செய்விணைகள் தீறும் என்று நம்பிக்கை. விழா ஏற்பாடுகளை ஊர் கொத்துகார் தங்கராஜ் செய்திருந்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்