ரூபி மனோகரனின் இடைநீக்க உத்தரவுக்கு தடை: காங்கிரஸ் தலைமை அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2022 (12:42 IST)
சமீபத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் அந்த சஸ்பெண்டுக்கு இடைக்கால தடை விதித்து காங்கிரஸ் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
நவம்பர் 15ஆம் தேதி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதலைத் தொடர்ந்து நாங்குநேரி காங்கிரஸ் காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது
 
இந்த ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் சஸ்பெண்ட் ரத்து செய்யப்படுவதாக சற்றுமுன் காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைமை வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் நடவடிக்கையை நிறுத்தி வைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்