ஆம்புலன்ஸ்-க்கு வழிவிடாவிட்டால் ரூ.10,000 அபராதம்?

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2022 (11:28 IST)
ஆம்புலன்ஸ்-க்கு வழிவிட வேண்டுமென்ற விதி இருக்கும் நிலையில் இனி ஆம்புலன்ஸுக்கு வழி விடவில்லை என்றால் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
 
ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்களுக்கு வழிவிடாமல் செல்லக்கூடாது என்றும் உடனடியாக ஆம்புலன்ஸுக்கு வழி விட வேண்டும் என்றும் காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர் 
 
இந்த நிலையில் ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்களுக்கு வழிவிடாமல் செல்பவர்கள் மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுபவர்கள் ரூபாய் 10,000 அபராதம் வசூலிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
அதேபோல் தேவையில்லாமல் ஹாரன் அடிப்பவர்கலுக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும் அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவு சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு ரூபாய் 20000 அபராதமும் வசூலிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
காவல்துறையின் இந்த அபராதம் குறித்த அறிவிப்பு வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்