கூவத்தூரிலிந்து ஒரே காரில் 5 பேர் சென்னை நோக்கி கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் கல்பாக்கம் அடுத்த வாயலூர் பகுதியில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமிருந்த ஒரு மரத்தின் மீது கார் வேகமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதை பார்த்த மக்கள் ஓடி வந்து காரிலிருந்தவர்களை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களை வெளியில் மீட்க முடியவில்லை.
5 பேரும் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும், இறந்தவர்கள் ராஜேஷ் 25, ஏழுமலை 26, விக்கி 25 என்பதும் தெரியவந்தது. நண்பர்களான இவர்கள் கூவத்தூரில் கள்ளு குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் காரை ஓட்டி வந்தபோது விபத்தில் சிக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். கார் ஓட்டுனர் சரவணன்(50), ஜெய் பினிஷா (40), அவரது மகன்கள் மிக்சால் (20), பைசல் (12) ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.