10-ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி.! மண்ணெண்ணெய் குடித்து மாணவி தற்கொலை..!!

Senthil Velan

வெள்ளி, 10 மே 2024 (18:06 IST)
திருத்தணி அருகே 10-ஆம் வகுப்பில் தோல்வி அடைந்ததால் மண்ணெண்ணெய் குடித்து மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த மேல் பொதட்டூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி முரளி என்பவரது மகள் குமாரி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 187 மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்தார்.
 
சமூக அறிவியல் பாடத்தில் 35-க்கு 10 மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி குமாரி வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் குடித்துள்ளார்.  இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மாணவி குமாரி உயிரை இழந்தார். 

ALSO READ: உச்சநீதிமன்ற தீர்ப்பு நீதியை நிலைநாட்டும்.! கெஜ்ரிவாலின் விடுதலைக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு..!
 
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி மண்ணெண்ணெய் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்