நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று கட்ட வாக்குபதிவு நடைபெற்ற முடிவடைந்த நிலையில், நான்காம் கட்ட தேர்தல் மே 13ம் தேதி நடைபெறுகிறது. ஆந்திராவில் சட்டசபை தேர்தலுடன் சேர்த்து மக்களவை தேர்தலும் நடக்க இருக்கிறது. இதற்காக அங்கு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பண பட்டுவாடாவை தடுக்கும் வகையில் பறக்கும் படையினரும், போலீசாரும் தேர்தல் நடக்கும் பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஆந்திராவின் என்.டி.ஆர் மாவட்டத்தில் உள்ள கரிக்காபாடு சோதனைச்சாவடியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைப்களை ஏற்றிவந்த லாரியை மடக்கி சோதனையிட்டனர்.