பட்ஜெட் நாளில் திடீரென டெல்லி சென்ற கவர்னர் ஆர்.என்.ரவி.. என்ன காரணம்?

Siva
திங்கள், 19 பிப்ரவரி 2024 (08:12 IST)
தமிழக சட்டமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் தமிழக கவர்னர் ஆர் என் ரவி டெல்லி பயணம் செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழக சட்டசபையில் இன்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2024 - 25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில் பல புதிய அம்சங்கள் இருக்கும் என்றும் மக்களுக்கான நலத்திட்டங்கள் இருக்கும் என்றும் மேலும் சில சலுகைகள் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் சட்டசபையில் ஆளுநர் உரையை படிக்காமல் கவர்னர் ஆர்.என் ரவி தேசிய கீதம் இசைக்கும் முன்பே திடீரென சட்டசபையில் இருந்து வெளிநாட்டு செய்த நிலையில் இன்று திடீரென அவர் டெல்லி சென்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
தமிழக சட்டசபையில் பட்ஜெட் உரை நிகழ்த்தும் நாளில் கவர்னர் டெல்லி செல்லும் சென்றுள்ள  நிலையில் அவர் டெல்லியில் சில முக்கிய தலைவர்களை சந்திப்பார் என்றும் சில அதிகாரிகளையும் சந்தித்து ஆலோசனை செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்