64 வயதில் நீட் தேர்வில் தேர்ச்சி! – சாதனை புரிந்த தலைமை ஆசிரியர்!

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (12:14 IST)
மத்திய அரசு நடத்தும் மருத்துவ படிப்பு நுழைவு தேர்வான நீட் தேர்வில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தேர்ச்சி அடைந்துள்ளது வைரலாகியுள்ளது.

ஆண்டுதோறும் மருத்துவ படிப்புகளில் சேர மத்திய அரசு நீட் நுழைவு தேர்வை நடத்தி வருகிறது. இதில் ஆண்டுதோறும் பல லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதி வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னையை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளது வைரலாகியுள்ளது. சென்னையை அடுத்த நாவலூரை சேர்ந்த 64 வயதான ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் முனுசாமி சுப்ரமணியன் என்பவர் நீட் தேர்வு எழுதி 348 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

நீட் நுழைவு தேர்வில் பங்கேற்க அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயம் இல்லாத நிலையில் 17 வயது நிரம்பிய எவரும் விண்ணப்பிக்கலாம் என்ற ரீதியில் அவர் இந்த தேர்வை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்