இருட்டு கடை அல்வா போல் திமுக உருட்டுகடை அல்வா தருகிறது என்று நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசை விமர்சனம் செய்த நிலையில், அல்வாவும் ஒரு உணவுதான்; தேவைப்படும் நேரத்தில் அதையும் முதலமைச்சர் பரிமாறுவார் என்று அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த அல்வாவால் தான் அதிமுக பல கோணங்களில் சென்று கொண்டிருக்கிறது என்றும், அவர் கொடுத்த அல்வாவால் செங்கோட்டையன் போன்றவர்கள் பிரிந்து நின்று எதிர் கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
நேற்று சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக அதன் பின் செய்தியாளர்களிடம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியபோது, 'உருட்டுக் கடை அல்வா கொடுக்கிறேன், அதை சாப்பிட்டு பாருங்கள்' என்று விநியோகம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.