கடந்த மூன்று ஆண்டுகளாக சிறுநீரகப் பிரச்சனையால் கமலேஷ் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவர்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை பரிந்துரைத்தனர். இதனையடுத்து, தாய் கங்கா வர்மா தயக்கமின்றி தனது சிறுநீரகத்தை தானம் செய்ய முன்வந்தார்.
மருத்துவமனையின் சிறுநீரகத் துறை தலைவர் டாக்டர் ரிதேஷ் பனோடே, "தானமளித்தவரின் வயது முதிர்வு காரணமாக அறுவை சிகிச்சை சவாலாக இருந்தும், அது முழு வெற்றி பெற்றது" என்று உறுதிப்படுத்தினார். சிகிச்சைக்குப் பின் தாயும், மகனும் தற்போது வீட்டில் நலமாக மீண்டு வருகின்றனர்.