ஆர்.கே.நகரில் யாருக்கு வெற்றி? - உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்

Webdunia
திங்கள், 18 டிசம்பர் 2017 (14:32 IST)
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்காக இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறித்து மத்திய அதிகாரிகள் மத்திய அரசுக்கு அறிக்கை சமர்பித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 
கடந்த ஏப்ரல் மாதம் பணப்பட்டுவாடா காரணமாக ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகருக்கான தேர்தல் வருகிற 21ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என அதிமுக அணியை சேர்ந்த வேட்பாளர் மதுசூதனன், குக்கர் சின்னத்தில் போட்டியிடும் டிடிவி தினகரன் மற்றும் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் ஆகியோரிடையே பலத்த போட்டி நிலவுகிறது.
 
சில நாட்களுக்கு முன்பு வெளியான கருத்து கணிப்புகளில் டிடிவி தினகரன் வெற்றி பெறுவார் எனக் கூறப்பட்டது. அந்நிலையில், நேற்றும், நேற்று முன் தினமும் மதுசூதனன் தரப்பில் அதிமுக அமைச்சர்கள் ஆர்.கே.நகர் வேட்பாளர்களுக்கு தலைக்கு ரூ.6 ஆயிரத்தை வழங்கியதாக புகார் எழுந்தது. இதனால் ஆர்.கே.நகர் களோபரமானது. பணப்பட்டுவாடா செய்த மதுசூதனன் தரப்பு ஆட்களை டிடிவி தினகரன் ஆட்கள் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தது. ஆனால், அவர்கள் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.
 
இந்நிலையில், ஆர்.கே.நகரில் மது சூதனன் முதல் இடத்தையும், தினகரன் 2ம் இடத்தையும், மருதுகணேஷ் மூன்றாம் இடத்தையும் பிடிப்பார்கள் என ஆர்.கே.நகர் மக்களின் மன ஓட்டத்தை அறிந்து உளவுத்துறை அதிகாரிகள் மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளனராம். எனவே, எத்தனை புகார்கள் வந்தாலும், ஆர்.கே.நகர் தேர்தல் இந்த முறை ரத்து செய்யப்படாது எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்