ரூ.18500 கோடி செலவில் கட்டப்பட்ட கூகுள் அலுவலகத்தில் மூட்டைப்பூச்சிகள் தொல்லை: ஊழியர்கள் அதிர்ச்சி..!

Siva

செவ்வாய், 21 அக்டோபர் 2025 (12:42 IST)
நியூயார்க்கில் உள்ள கூகுள் நிறுவனத்தின் அலுவலகத்தில் மூட்டைபூச்சிகளின் தொல்லை இருப்பதால் ஏற்பட்ட அச்சத்தின் காரணமாக, ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
ஞாயிற்றுக்கிழமை அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், மூட்டைபூச்சிகளை கண்டறியும் மோப்ப நாயின் தேடுதலில் மூட்டைபூச்சிகள்  இருப்பதற்கான ஆதாரம் கிடைத்ததாக கூகுள் தெரிவித்துள்ளது. பூச்சிகளை அழிக்கும் சிகிச்சை நிறைவடையும் வரை அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்குமாறு ஊழியர்களுக்கு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 
சுமார் $2.1 பில்லியன் செலவில் அதாவது இந்திய மதிப்பில் ரூ.18500 கோடி செலவில் கட்டப்பட்ட செல்சியா வளாகத்தில் உள்ள பெரிய பொம்மைகள் மூலம் இந்த மூட்டை பூச்சிகள் தொல்லை பரவியிருக்கலாம் என கருதப்படுகிறது. 
 
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நியூயார்க்கில் உள்ள மற்ற கூகுள் வளாகங்களிலும் கூடுதல் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், ஊழியர்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் புகாரளிக்குமாறும் நிறுவனம் கோரியுள்ளது.  
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்