இந்து அல்லாதோர் வீட்டிற்கு செல்லும் பெண்களின் கால்களை உடையுங்கள்: பாஜக பிரபலத்தின் சர்ச்சை பேச்சு..!

Siva

செவ்வாய், 21 அக்டோபர் 2025 (12:48 IST)
மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் போபால் எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் பொதுவெளியில் ’இந்து அல்லாத ஒருவரின் வீட்டிற்குத் உங்கள் வீட்டு மகள்கள் சென்றால், பெற்றோர்கள் அவர்களின் கால்களை உடைக்க வேண்டும்" என்று அவர் பேசியிருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது.
 
போபாலில் நடந்த ஆன்மிக நிகழ்வில் பேசிய அவர், பெற்றோரின் விருப்பத்துக்கு மாறாக செயல்படும் பிள்ளைகளுக்கு 'உடல் ரீதியான' தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். "அவர்கள் துண்டு துண்டாக வெட்டப்படுவதில் இருந்து காக்கவே பெற்றோர்கள் அவ்வாறு செய்ய வேண்டும்" என்றும் பிரக்யா சிங் தாக்கூர் கூறினார். 
 
பெற்றோரின் பேச்சை கேட்காத பெண்கள் வீட்டைவிட்டு ஓட தயாராக இருப்பார்கள், அவர்களை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வரும் நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பூபேந்திர குப்தா உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பிரக்யா தாக்கூரின் இந்த பேச்சிற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்