வங்கக்கடல் சுழற்சி: இன்று 16 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை; நாளையும் மழை பெய்யும்..!

Mahendran

திங்கள், 13 அக்டோபர் 2025 (15:07 IST)
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல பகுதிகளிலும் மழைக்கான வாய்ப்பு உள்ளது.
 
இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, கீழ்க்கண்ட 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது:
 
திருப்பத்தூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், திருச்சி, கரூர், திருப்பூர், கோவை, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி.
 
நாளை  நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
 
சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.  
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்