முதல்வரை சந்தித்த அதிருப்தி எம்.எல்.ஏ : தினகரனுக்கு தொடர்ந்து சறுக்கல்...

செவ்வாய், 2 ஜூலை 2019 (17:26 IST)
அறந்தாங்கி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ரத்தினசபாபதி, டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இதனால் அதிமுவில் பதற்றம் அதிகரித்தது. அப்போது தினகரன் அமமுகவில் தங்கதமிழ்ச்செல்வன் உள்ளிட்ட சில முக்கிய பிரமுகர்கள் இருந்தனர். 
இதனையடுத்து அரசுக்கு எதிராகச் செயல்பட்டதாகவும் தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகவும்  ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய எம்.எல்.ஏக்களுக்கு  விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
 
இந்த நோட்டிஸுக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டதை அடுத்து இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், ரத்தினசபாபதி இன்று முதல்வரை சந்திந்துள்ளார்.
 
ஏற்கனவே விருதாச்சலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன் தனது ஆதரவு அரசுக்குத்தான் என ஏற்கனவே கூறியுள்ளார்.இந்நிலையில் தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடியை ரத்தினசபாபதி சந்தித்துள்ளது அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
 
அண்மையில் அமமும நிர்வாகிகள் பலரும் அதிமுகவின் இணைந்தவண்ணம் உள்ளனர் . சில நாட்களுக்கு முன்னர் அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் திமுக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்