இதனைத்தொடர்ந்து, கடல்நீரை குடிநீராக்குவதற்கும் , நேற்று முதல்வர் எடப்பாடியார் அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மக்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் , எல்லோரும் எனது பணிவான் வேண்டுகோள்! இனிவரும் 10 ஆண்டுகளுக்கு நம் பூமியில் தற்போதுள்ள வெப்பத்தைவிட 4 டிகிரி வெப்பம் அதிகமாக இருக்கும். இமயமலையில் உள்ள பனிக்கட்டிகள் உருகிவிடும். அதனால் நாம் எல்லோரும் புவி வெப்பமயமாதலுக்கு எதிராக களம் இறங்க வேண்டும். முக்கியமாக தண்ணீரை வீணாக்ககக்கூடாது.பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதையும், எரிப்பதையும் கைவிடுவோம்!காரணம் ஒருவரே புவி வெப்பமாகி வருவதற்கு எதிராக போராட முடியாது என்று தெரிவித்துள்ளார்.