முதல்வர் பழனிசாமி பழனிச்சாமி கடந்த சில வாரங்களாக சில உடல் அவதிகளால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜூன் 5 ஆம் தேதி முதல் பல் வலிக்காக சில சிகிச்சைகளைப் பெற்று வருகிறார். நேற்று தண்ணீர்ப் பற்றாக்குறை தொடர்பான ஆய்வுக்கூட்டங்களில் கலந்துகொள்வதாக இருந்தார். ஆனால் திடீரென உயர் ரத்த அழுத்தம் மற்றும் டிஹைட்ரேஷன் ஆகிய பிரச்சனைகளால் அப்போல்லோ மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டார்.