தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் தலைமையில் இரண்டு கூட்டணிகள் இருவாகியுள்ளன. கூட்டணி உருவாகினாலும், தொகுதிகளின் பங்கீட்டில் இன்னும் தெளிவான நிலைபாடு எட்டவில்லை.
அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, புதிய தமிழகம், ஐஜேகே ஆகிய கட்சிகள் உள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், இடது சாரிகள், மதிமுக, விசிக ஆகிய கட்சிகள் உள்ளன.
அதிமுகவில் உள்ள பாஜகவுக்கு 5 இடங்களும், பாமகவுக்கு 7 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. திமுகவில் காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு மட்டுமே முடிவடைந்துள்ளது.
அதில் அதிமுக - தேமுதிக கூட்டணிதான் இரண்டு நாட்களாக இழுத்துக்கொண்டே இருக்கிறது. பாமகவுக்கு இணையாக 7 தொகுதிகளை விஜயகாந்த் கேட்பதாலும், ஆனால் 2 அல்லது 3 தொகுதிகளை மட்டுமே கொடுக்க அதிமுக தயாராக இருந்ததாகவும் தெரிகிறது.
மேலும், இரட்டை இல்லை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று அதிமுக கூறுவதால் இந்த தொகுதி பங்கீடு இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் விஜயகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
இதனை தொடர்ந்து தேர்தலில் திமுக கூட்டணிக்கு தேமுதிக வரலாம் என்ற செய்தியும் அடிபடுகிறது. ஆக மொத்தம் அதிமுக - தேமுதிக கூட்டணி இருக்கா? இல்லையா? அப்படி இருந்தால் தொகுதிகளை சீக்கிரம் பிரித்து கொடுங்க என்பதே மக்களின் மைண்ட் வாய்ஸாக உள்ளது.