40 ரூபாய் கொடுத்தா பசித்தவர்களுக்கு உணவு கிடைக்கும்! – தமிழில் வீடியோ வெளியிட்ட ராஷி கண்ணா!

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (12:20 IST)
கொரோனா பரவலால் ஊரடங்கு உள்ள நிலையில் பசித்த மக்களுக்கு உணவு கிடைக்க நிதியளிக்க கோரி நடிகை ராஷிக்கண்ணா வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏழை எளிய மக்கள் அன்றாட உணவிற்கே அல்லாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் பல தங்களால் ஆன அளவு மக்களின் பசியாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் தன்னார்வல தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டுள்ள நடிகை ராஷி கண்ணா “இரண்டாவது அலையின் போது, மேலும் மேலும் பல குடும்பங்கள் பசியுடன் போராடிக் கொண்டிருக்கின்றன. வெறும் ரூபாய் 40க்கு ரோட்டி வங்கி இன்னும் ஒரு பசித்த வயிற்றுக்கு உணவளிக்க உதவலாம்.ரோட்டி வங்கி செய்யும் அற்புதமான பணியை நான் ஆதரிக்கிறேன். உங்களால் முடிந்தால் தயவு செய்து நீங்களும் ஆதரிக்கலாமே.” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்